2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்கள் இருவரைக் காணவில்லை

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுத் திங்கட்கிழமை (14) அதிகாலை 5 மணிக்கு மீன் பிடிப்பதற்காகச் சென்ற இருவரும், இதுவரைத் திரும்பவில்லையென படகு உரிமையாளரான எம்.கே. சம்சுதீன் என்பவர் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொத்துவில் 5ஆம் பிரிவு சின்ன உல்லையைச் சேர்ந்த எம்.பி. மன்சூர் (வயது 40), எம்.சி. முனாஸ் (வயது 30) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X