Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பிரதேசத்தில் மான் இறைச்சியை எடுத்துச் சென்ற வேளை சவளக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவித்ததுடன், எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை உத்தரவிட்டார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று பகல் 12.00 மணியளவில் சவளக்கடை வீதியின் சந்தியில் 750 கிராம் மான் இறைச்சியை துவிச்சக்கரவண்டியில் எடுத்துவந்த நபரை கைது செய்ததுடன், சொறிக்கல்முனை பகுதியில் 450 கிராம் மான் இறைச்சியை எடுத்து வந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago