2025 மே 21, புதன்கிழமை

மீன்பிடி படகுகளுக்கு அசிட் வீச்சு

Gavitha   / 2016 மார்ச் 12 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான மூன்று மீன்பிடி படகுகளினுள் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இனந்தெரியாத நபர்களினால் அசிட் ஊற்றப்பட்டு அதனுள் இருந்த பெறுமதிமிக்க மீன்பிடி வலைகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை- 8ஆம் பிரிவைச் சேர்ந்த மீனவர் செயினுலாப்தீன் அஹத் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகை இலக்கு வைத்தே, இந்த அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீன்பிடிக்காக மீனவர்களுடன் ஒலுவில் துறைமுகத்துக்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் குறித்த மீனவருக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், படகின் உரிமையாளர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னரும் பாதுகாப்புக்காக துறைமுகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடி படகுகளிலிருந்து, பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் துறைமுக அதிகாரிகளிடம் பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .