2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மூன்று அபிவிருத்திகளுக்காக நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 மே 29 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையால் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று அபிவிருத்திகளுக்காக 85 இலட்சம் ரூபாயை  கிழக்கு மாகாண உள்ளூராட்சி, சுற்றுலாத்துறை அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாக மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு சனிக்கிழமை (28) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

தூரப் பயணிகளின் நலன் கருதி கல்முனைப் பிரதான பஸ் நிலையத்தில் தகவல் மையம் மற்றும் குளியல் அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட நிலையத்தை அமைப்பதற்காக 30 இலட்சம் ரூபாயும் பாண்டிருப்புப் பிரதேசத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக 35 இலட்சம் ரூபாயும் மருதமுனைப் பிரதேசத்தில் கடற்கரையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்துக்காக 20 இலட்சம் ரூபாயும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X