2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மூன்று பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 24 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, மாவடிப்பள்ளி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம், இன்று வியாழக்கிழமை (24) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான மாவடிப்பள்ளியைச் சேர்ந்த முகம்மது இப்றாஹிம் பஸிந்து (வயது 49) எனவும் இவர் ஒரு மன நோயாளி எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம், சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X