Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை, தீகவாபியில் அமைந்துள்ள இயற்கை மூலிகைத் தோட்டத்தினை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
அண்மையில் தீகவாபி விகாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் மூலிகை தோட்டத்தினைப் பார்வையிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தீகவாபியில் அமைந்துள்ள மூலிகைத்தோட்டமானது புனித வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள மகத்துவம் வாய்ந்த பல மருத்துவத் தாவரங்கள் அழிந்து செல்வது தடுக்கப்படவேண்டும். சுதேச மருத்துவ தேவைக்கான இந்த மரங்கள் மற்றும் கொடிகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது என்றார்.
மேலும், எதிர்காலத்தில் இங்குள்ள பெரிய ஆலைகளை போல் மரங்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். மூலிகை தோட்டங்களானது எதிர்கால தலைமுறைக்காக நாம் விட்டுச் செல்லும் விலைமதிப்பற்ற சொத்துக்களாக இருக்கும். ஆகவே, இப்புனித பூமியிலுள்ள சுற்றச்சூழல் மற்றும் மூலிகைத் தோட்டங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இங்குள்ள விகாரையும் புனரமைக்கப்படும் என்றார்.
51 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago