2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முழு நாடும் ஒளிமயமாக வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

நாடளாவிய ரீதியிலுள்ள எல்லாப் பிரதேசங்களும் இருள் அகன்று முழு நாடும் ஒளிமயமாக வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புக்களை இன்றை நல்லாட்சி அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துவருவதாக மின் சகத்தி அமைச்சர் அஜீத் பி. பெரேரா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட செயலாளர் துசித பி. வணிகசிங்க தலைமையில் மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள், பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகளுக்கான கூட்டம் நேற்று (05) மாவட்ட செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

'இருள் அகன்று, முழு நாடும் ஒளிமயம்' என்ற கருப்பொருளில் மின் வழங்கள் செயற்திட்டம் ஒன்றை தேசிய ரீதியாக அமுல்படுத்தி அதன் மூலம் எமது நாட்டை ஒரு ஒளிமயமான நாடாக மாற்றியக்கும் திட்டத்தை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் இச்செயல் திட்டத்துக்கு எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்நிற்பதாகவும் கூறினார்.

அதற்கான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இச்செயற்திட்டத்தை பிரதேச ரீதியில்  அமுல்படுத்தும் நோக்கில் தற்போது பிரதேச செயலகங்களுடாக தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும் இதற்கான தகவல்களை மிக விரைவில் வழங்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X