Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்,ஏ.எஸ்.எம்.முஜாஹித்
யாழ்ப்பாணத்திலும் சம்பூரிலும் உச்ச பாதுகாப்பு வலயமாக கருத்தப்பட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் கையளிக்க முடியுமென்றால், ஏன் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் காணிகளை கையளிக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அட்டாளைச்சேனை ஹபானா பூங்காவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மூன்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்று அம்பாறை மாவட்டத்தை கைப்பற்றியுள்ளோம்.
இத்தேர்தல் வெற்றியின் பின் அட்டாளைச்சேனை மக்கள் கட்சியோடு பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதை எங்களால் உணரமுடிகின்றது. அந்த எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்தும் எமது கட்சிக்கு கிடைக்கவிருக்கின்ற இத்தருவாயில் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு ஒரு அரசியல் அதிகாரத்தை கொடுக்க கட்சியின் தலைமை முடிவுவெடுத்துள்ளது என்றார்.
மேலும்,கடந்த தேர்தலின்போது, அட்டாளைச்சேனை மக்களுக்கு ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கட்சியின் தலைவர் தருவதாக வழங்கிய உறுதிமொழியை கட்சியும் அதன் தலைமையும் செவ்வனே நிறைவேற்றும் முடிவை எடுத்துள்ளது.
இதற்கு ஆதரவாக உயர்பீட உறுப்பினர்களும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாகவும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago