Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 25 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அமைச்சரவை அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காகவே சிலர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று, புதுக் கட்சிகளை ஆரம்பித்தனர். அத்தகையோரை மீண்டும் ஒன்றிணைத்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவது வேடிக்கையானதாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது விடயமாக முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கபூர் விடுத்திருந்த அறிக்கை திங்கட்கிழமை (23) தமிழ் மிரர் பத்திரிகையில் வெளிவந்திருந்தது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இ தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள் தம்மை தனிக் கட்சிகளாக மகுடம் சூட்டிக் கொண்டனவே தவிர முஸ்லிம் சமூகத்திற்காக அவை பெற்றுக் கொடுத்த உரிமைகள் எவை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன்களை பாதுகாப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் போராடி வருவதை அப்துல் கபூர் போன்றவர்கள் அறியாமல் இருப்பது கண்டு ஆச்சரியமடைகின்றேன்.
முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணியை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும் அது எந்த கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் அமையப்பெற வேண்டும் என்று அறைகூவல் விடுப்போர் சொல்ல முன்வரவில்லை.
இனப்பிரச்சினைத் தீர்வு, தேர்தல் முறை மாற்றம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம் போன்றவற்றில் முஸ்லிம் கட்சிகள் எந்தக் கொள்கை உடன்பாட்டின் கீழ் ஒன்றிணைந்து கூட்டமைப்பை ஏற்படுத்தலாம் என்று யோசனைகளை முன்வைக்காமல் வெறுமனே விமர்சனங்களை மட்டும் முன்வைத்து அறிக்கைகளை வெளியிட்டு சிலர் காலம் கடத்தி வருகின்றனர்.
ஆனால், இவ்விடயங்களில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மிகவும் கரிசனையுடன் காரசாரமாகவே செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
7 hours ago