2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

யுத்தத்தின் பின்னர் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புகள் அதிகரித்துள்ளன

Administrator   / 2016 ஜனவரி 02 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமான தொடர்புகள் மிகவும் குறைவாக இருந்தது. இதற்குக்  காரணம் எமது நாட்டில் நடைபெற்ற யுத்தத்தமே. இன்று நாட்டில் அனைவரும் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழும் சூழல் ஏற்பட்டு உள்ளது என வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் தெரிவித்தார்

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் வடக்கு கிராமசேவகர் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான கூட்டமும் கலந்துரையாடலும் வியாழக்கிழமை (31) மாலை  கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் குழுத் தலைவர் த. தவக்குமார் தலைமையில் நடiபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாற கூறினார். அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

'யுத்தகாலத்தில்  பொதுமக்கள் பயத்தின் காரணமாக பொலிஸாருடனான தொடர்புகளை நிறுத்திக்கொண்டனர். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி பொலிஸார், இராணுவத்தினர் அனைவரும் மக்களுடன்  தொடர்புகளை பரிமாறிக்கொள்வதற்கு நல்ல காலச்சூழல் நிலவி வருவகின்றது. நாடு பூராகவும் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகளிலும் இந்த சிவில் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கியுள்ளோம்.

 எமது சமூகத்தில் ஏற்படுகின்ற சமூகச்சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதற்கு இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

குறிப்பாக சட்டவிரோத மதுபான விற்பனை, வயது குறைந்த திருமணம், சட்ட விதிகளை மீறி முறையற்ற முறையில் வாகனம் செலுத்துவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்துவதற்கு கிராமங்கள் தோறும் இக்குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு குழுக்கலுள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சிறுவயதில் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்கள் மற்றும் வறுமைக்கோட்டில் வாழ்கின்ற சிறுவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு, வீதிகளை சுத்தம் செய்தல், உரிய அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வீதி மின்விளக்குகளை பொருத்துதல், காட்டு யானைகளின் ஆபத்தில் இருந்து மக்களை எப்படி பாதுகாப்பது போன்ற திட்டடங்களை நிறைவேற்றுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X