2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் மீனவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 04 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாகாமம் கிராமத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான சிவராசா சுதாகரன் (வயது 36) என்ற மீனவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாகாமம் குளத்துக்கான மீன்பிடிச் சங்கத்தில் அங்கத்துவம் இல்லாத மீனவர்களுக்கு அக்குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைசெய்யப்பட்டு, காவல் கடமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் 05 பேர் காவல் கடமையில்; ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு காவல் கடமையில்; ஈடுபட்ட மீனவர்களை இன்று திங்கட்கிழமை அதிகாலை யானை விரட்டியுள்ளது. இதன்போது, மேற்படி மீனவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக உறவினர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X