2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யானையின் தாக்குதலில் வீடு தேசம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. சுகிர்தகுமார் 

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு வேப்பங்குளம் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (04) இரவு யானைத் தாக்குதலுக்குள்ளாகி பகுதியளவில் சேதமடைந்த வீடொன்று, நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு மீண்டும் யானைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

52 வயதுடைய கு.பராக்கிரமராஜா என்பருக்கு சொந்தமான வீடே இவ்வாறு யானைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு அருகில் சத்தம் கேட்பதை அறிந்த குடும்பத்தவர்கள், வெளியே சென்று பார்த்த போது வீட்டிற்கு முன்னால் யானை நிற்பதைக் கண்டு வீட்டின் பின்வழியாக ஓடி உயிர் தப்பியுள்ளனர். 

எனினும், யானை வீட்டை முற்;றாகத் தாக்கியதனால் வீட்டினுள் இருந்த விளக்கு வீழ்ந்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் பணம் உள்ளிட்ட வீட்டு உடமைகள் யாவும் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு மீண்டும் அப்பகுதிக்குச் சென்ற யானையினால் ஏற்கெனவே உடைக்கப்பட்ட வீட்டின் ஏனைய பகுதிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதாக உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிக்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X