2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ரஷ்ய சர்வதேச பல்கலையில் கலாநிதி பட்டம் பெற்ற அக்பர்

Gavitha   / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனையைச் சேர்ந்த அக்பர் ஜெமீல்; ஹாஜி, ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அடிப்படை கல்விக்கான ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில்,  இராஜதந்திரமும்  வெளிநாட்டு உறவுகளுக்குமான கலாநிதி பட்டப்படிப்பை இவர் பூர்த்தி செய்த பின்னரே இவர் இந்த பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) ஆகிய தினங்களில், சென் பீட்டஸ் பேக் ரஷ்யாவில் நடைபெற்ற 7ஆவது சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொண்டு,     இவருக்கான கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் உயர்கல்விக் கூடத்தின் அறிவியல் பேராசிரியர்;;; யுபழி முநமசையஉhயசயைn (ஜனாதிபதி பிரான்ஸ்), இவருக்கான கலாநிதி பட்டத்தை வழங்கினார்.

மேற்படி பல்கலைக்கழகத்தில் சர்வதே நாடுகளைச் சேர்ந்த 35 மாணவர்களில், இலங்கையிலிருந்து இவர் மட்டுமே மேற்படி கற்கைநெறிக்கான கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி  ஆகியவற்றின் பழைய மாணவராவார். கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞானமானி பட்டதாரியான இவர், றியாத் பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் ஆங்கில டிப்ளோமா பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

மேலும் லண்டன் புறுனல் பல்கலைக்கழகத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கணினி பொறிமுறை திட்ட, டிப்ளோமா பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். இவர் ஜோர்தான், லெபனான் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களில் கவுன்சிலராகவும் தொழில் திணைக்கள தலைவராகவும்  கடமையாற்றிவிட்டு, தற்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தில் சிரேஷ்ட முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X