2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

லங்கம கொந்தம அபிவிருத்தித் திட்டத்தில் பொத்துவில் பாடசாலைகள் தெரிவு

Niroshini   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

லங்கம கொந்தம பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பசறிச்சேனை அல்-இஸ்றாக் வித்தியாலமும் பொத்துவில் அல்-கலாம் வித்தியாலமும் உள்வாங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள லங்கம கொந்தம பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாடசாலைகள் பற்றி விளக்கமளிக்கும் உயர்மட்ட கூட்டம் சனிக்கிழமை(19) கல்வி அமைச்சர் அகிலவிராஜ் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது,லங்கம கொந்தம பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலகத்துக்கு இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில் பிரதேச செயலகம் ஒரு தனியான பிரதேச செயலகமாகும்.

அவ்வாறிருந்தும் ஏன் பொத்துவில் பிரதேசத்திலிருந்து இரண்டு பாடசாலைகள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவில்லை என்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

எனவே, கல்வி அமைச்சர் இத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச பாடசாலைகளை உள்ளீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்;ந்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ்,அமைச்சின் அதிகாரிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேசத்திலுள்ள இரண்டு பாடசாலைகளை உள்வாங்குமாறு பணிப்புரை விடுத்தார். அதற்கமைவாக பசறிச்சேனை அல்-இஸ்றாக் வித்தியாலமும் பொத்துவில் அல்-கலாம் வித்தியாலமும் இதன் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X