2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வடிகான்களை துப்பரவு செய்யுமாறு கோரிக்கை

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதான மற்றும் உள்வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்களை துப்பரவு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடிகான்கள் குப்பையும் நீரும் நிரைந்து காணப்படுவதால் மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கின்றது. தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், நீர் தேங்கி வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு டெங்கு நுளம்புகள் பரவும் சூழ்நிலை காணப்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால்,பாதையால் போக்குவரத்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ. அஸ்மியிடம் இன்று ஞாயிற்கிழமை வினவிய போது,

வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மாநகர சபை இணைந்து வடிகான்களை துப்பரவு  செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் படிப்படியாக குறித்த வடிகான்கள் துப்பரவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .