Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூன் 06 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் கொரோனா தொற்று 03 ஆவது அலை அதிகரிப்பு காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை கடுமையாக கடைப்பிடிக்குமாறு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, இன்று ஞாயிற்றுக்கிழமை (06) வினயமாகக் கேட்டுக்கொண்டார்
சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் உள்ளவர்கள் ஏனைய பிரதேசங்களுக்கு சென்று நாளாந்த கூலித் தொழில் மற்றும் சுத்திகரிப்பு உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபடுபவர்கள். அவர்களுடன் தொடர்புடையவர்கள் மிக அவதானமாகச் செயற்படுமாறு அறிவித்துள்ளார்.
சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராம சேவகர் பிரிவு கடந்த வியாழக்கிழமை (03) முதல் முடக்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி சிலர் வீதிகள் நடமாடுவதை காணக் கூடியதாக உள்ளது. இவர்களை கைது செய்வதற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் மற்றும் சுகாதாரத் துறையினரும் கூட்டாக இணைந்து விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மரக்கறி மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் நடமாடும் சேவை மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும், மீறுபவர்களுக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
8 minute ago
11 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
25 minute ago