Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
ஜப்பான் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 32வது சர்வதேச இளைஞர் கப்பல் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கு பற்றுபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் டபிள்யு.ஜி.எஸ். ஏரத்திக அறிவித்துள்ளார்.
விண்ணப்பதாரிகள் 29 வயதுக்கு உட்பட்டவராகவும், கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழியுடன் சித்தியடைந்தவராகவும், இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழக அங்கத்தவராக இருக்க வேண்டும்.சிறந்த ஆங்கில மொழி பேச்சாற்றலும், விளங்கிக் கொள்ளும் ஆற்றலும் உடையவராக இருத்தல் வேண்டுமெனவும், விசேட திறமையுடையவராகவும், சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த தகைமைகளை உள்ளடக்கியதாக சுய விபர தகவல்கள் உள்ளடங்கிய விண்ணப்பப் படிவத்தை எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னராக உதவிப் பணிப்பாளர், சர்வதேச இளைஞர் தொடர்பு பிரிவு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலக்கம் 65, ஹய்லெவல் வீதி, மஹரகம எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு ள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
45 minute ago
46 minute ago
55 minute ago