2025 மே 05, திங்கட்கிழமை

’வீடற்றவர்களாக யாரும் இருக்கக்கூடாது’

வி.சுகிர்தகுமார்   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில், வீடற்றவர்களாக யாரும் இருக்க கூடாது என்றும் அதற்கான முழு நடவடிக்கையும், எதிர்வரும் ஆண்டுகளுக்குள் எடுக்கவுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவுகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழில் வாய்ப்பு உபகரணங்களும் பொது அமைப்புக்களுக்கான அத்தியாவசிய  பொருட்களும், நாடாளுமன்ற உறுப்பினரால், மக்களிடம் நேற்று (02) கையளிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் 7,000 ஆயிரம் வீடுகளை புனரமைக்க, பிரதமரூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான நிதியை, புனர்வாழ்வு அமைச்சினுடாக பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேசத்தில், 700 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றும் இந்த வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்ல, அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி, துஷ்பிரயோகங்களில் ஈடுபடாமல் பணியாற்றவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X