2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விசேட கல்விப் பிரிவுகளுக்கு அபிவிருத்தி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 21 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட இரண்டு பாடசாலைகளிலுள்ள விசேட கல்விப் பிரிவுகள் இந்த வருடத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம் தெரிவித்தார்.

விசேட தேவையுடையோருக்கான கல்விப் பிரிவு இந்த இரண்டு பாடசாலைகளிலும் காணப்படுகின்றன.

அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்று மாணவர்களுக்கான அகரம் அறியும் ஆரம்பமும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் அவ்வித்தியாலயத்தில் புதன்கிழமை (20) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கல்வி அபிவிருத்திக்கு இந்த வருடம் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

'மேலும், டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்திலுள்ள விசேட கல்விப் பிரிவுக்காக நவீன கட்டடத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கு 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X