2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விசேட தேவையுடையோர் 550 பேர் உள்ளனர்

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சுமார் 550 விசேட தேவையுள்ளவர்கள் உள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அன்வர் தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் விசேட தேவையுள்ள பிள்ளைகள் கல்வி கற்பதற்கான பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (13) மாலை ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அங்கவீனர்களுக்கான தேசிய செயலகம் விசேட தேவையுள்ளவர்களை பிரதேச செயலக ரீதியாக இனங்கண்டு அவர்களின் ஆற்றலுக்கு ஏற்ப பாடசாலை கல்வி, தொழில் கல்வி மற்றும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வழி வகைகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது.

சமூக சேவை திணைக்களம் விசேட தேவையுள்ளவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 03 ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதோடு, மருத்துவச் செலவு, அவர்களுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கி வருகின்றது.

இதற்காக அரசாங்கம் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்து விசேட தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.

இன்று எம் மத்தியில் விசேட தேவையுள்ளவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றார்கள் இவர்களிடத்தில் ஏதோ ஒரு திறமை மறைந்திருக்கின்றது. அதனை நாம் கண்டறிந்து வெளிப்படுத்துவது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும்.

பெற்றோர்கள் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளிடத்தில் கூடிய கரிசீலனை காட்ட வேண்டும். அப்போது தான் அவர்கள் சமூகத்தில் சிறந்த பிரஜையாக தலை நிமிர்ந்து வாழ்வார்கள் சில பெற்றோர்கள் அவர்களை கைவிட்டு விடுகின்றார்கள். அதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக ஆகியுள்ளதோடு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துக் வருகின்றார்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X