2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வீடமைப்பு மானியத்தை அதிகரிக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மானியமாக வழங்கப்படுகின்ற ஒரு இலட்சம் ரூபாய் நிதியை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க  வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கான வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாண சபைக்கு உள்ளது.

கடந்த காலத்தில் வீடமைப்பு மானியமாக இரண்டரை இலட்சம் ரூபாவை வழங்கி வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆனால், இவ்வருடத்தில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வீடமைப்பு மானியமாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் ஓர் அறையைக் கொண்ட வீட்டைக் கூட நிர்மாணிக்க முடியாத நிலைமை உள்ளது' என்றார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X