Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
வீடொன்றிற்குள் அத்துமீறி உட்சென்று வாளாலும் பொல்லாலும் தாக்கிக் காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரையும், இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்த சாமி, நேற்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை, கோணாவத்தை ஓ.பி.ஏ வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30க்கு அருகருகே உள்ள இரு வீட்டாருக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஒருதரப்பினர் மற்றத் தரப்பினரது வீட்டுக்குள் அத்துமீறிச் சென்று வாளாலும் பொல்லாலும் தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த குறித்த வீட்டு உரிமையாளரும் அவரது மனைவியும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் அவரது தரப்பினரையும் வீட்டுக்காரர்களுக்கு சார்பானவர்கள் தாக்கியதாகவும் அதனால் இருவர்; வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைதான மூவரும், நேற்று (08) மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு நீதிபதியால் வழங்கப்பட்டது.
17 minute ago
3 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
5 hours ago
8 hours ago