2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, இறக்காமம், அக்கரைப்பற்று நீதிப் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை, அமிரலிபுரம் மற்றும் 10 ஆம்; பிரிவு ஏ, 11 ஆம் பிரிவு ஏ, நல்லதனிமலை, இறக்காமம் கிராம அலுவலர் பிரிவு 1 முதல் 9 பிரிவுக்கான காதிப்பதவிக்கு முஸ்லிம் விவாக நீதிச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆனந்தி கனகரத்தினம் தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கான கரைவாகுப்பற்று காதிப் பதவிக்கு, நீதிச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோருகின்றது.

விண்ணப்பதாரர் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ஆணாக இருத்தல் வேண்டும் என்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரி ஒருவராக அல்லது முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவன மொன்றினால் வழங்கப்படும் சான்றிதழ் பெற்றுள்ள மௌலவி ஒருவராக இருத்தல் வேண்டும்.

அல்லது கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அல்-ஆலிம் சான்றிதழ் பெற்றுள்ள ஒருவராக அல்லது சட்டத்தரணி ஒருவராக அல்லது அதற்குச் சமனான தொழில்சார் தகைமையுடைய ஒருவராக அல்லது ஓய்வுபெற்ற பதவிநிலை தரத்திலான உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல் வேண்டும்.

தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் இதற்கு விண்ணப் பிக்கத்தகைமையற்றவர்களாவர், விண்ணப்பதாரர் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி ஒழுகுபவராகவும், 40வயதிற்கு மேற்பட்டவராகவும், நல்ல தேகாரோக்கியம் உள்ளவ ராகவும், நல்லொழுக்கமுள்ளவராகவும் இருக்க வேண்டியதோடு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் மற்றும் விசேடமாக முஸ்லிம் சட்டம் பற்றிய நல்ல அறிவுடையவராகவும் சமூகத்தில் நல்ல வரவேற்பும் மதிப்பும் உள்ளவராகவும் விவாகமானவராகவும் இருத்தல் வேண்டும். தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர் நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்படுகின்ற கால எல்லைக்கு நியமனம் செய்யப்படுவர்.

காதியாக நியமிக்கப்படுபவர் அப்பிரதேசத்திற்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருப்பது சட்ட ரீதியான அவசியமாகும்.
விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரம் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சிரேஷ்ட உதவிச் செயலாளர், நீதிச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலகம், கொழும்பு-12 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கபபட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X