Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் ஒரு வருடகால மாதர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சிநெறிக்காக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் 31.01.2017 அன்று 17 வயதுக்கு குறையாதவர்களாகவும் 35 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதுடன், தரம் -10வரை பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும். மேலும், குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் 03 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருபவராக இருக்க வேண்டும்.
இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னராக பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், அட்டாளைச்சேனை எனும் முகவரிக்கு விண்ணப்பப்படிவங்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago