2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விண்ணப்பம் கோரல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் உரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவுப் பிரிவுக்குள் நிரந்தரமாக வசிப்பவராகவும், 30 வயதுக்கு குறையாமல் இருப்பதோடு, 60 வயதுக்கு மேற்படாமல் இருத்தலும் வேண்டும்.

அத்துடன், விண்ணப்பதாரர்கள் விவாகம் செய்தவராக இருப்பதோடு, கல்வி மற்றும் ஏனைய தகமைகள் போன்ற மேலதிக தகவல்களை மாவட்ட பதிவாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம் போன்றவற்றில் அறிந்து கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், அம்பாறை எனும் முகவரிக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்காக ஆண் மற்றும் பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .