Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 14 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாணத்தில் அரசாங்க வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக மத்திய அரசாங்கமானது இவ்வருடம் 3,000 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷால் காசீம், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இம்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் ஊடாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்இ மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கே.முருகானந்தன்இ மாகாணத்தின் பிராந்திய சுகாதார உத்தியோகஸ்தர் எம்.ஏ.சிஹான் உள்ளிட்டோருடன் அண்மையில்; நடைபெற்றது. இதன்போதுஇ வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வைத்தியசாலைகளைப் புனரமைத்தல் மற்றும் கட்டடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் உள்ளிட்டவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் நிலவும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று அங்குள்ள குறைபாடுகளை தாம் கண்டறிந்துள்ளதுடன், விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று அங்குள்ள குறைபாடுகளைக் கண்டறியவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .