2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்துகளை தடுக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

வீதி விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்புப் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை வீதி நாடகங்கள் நடைபெற்றன.

அக்கரைப்பற்று பொலிஸார், ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து வீதி நாடகங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவிக்கையில், 'விபத்துகள் காரணமாக மரணங்கள் சம்பவிப்பதுடன், அங்கவீனர்களாகும் நிலைமையும் காணப்படுகின்றது. இவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X