2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விபத்துக்களில் 2,794 பேர் மரணமடைந்துள்ளனர்

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட விபத்துக்களில் 2,794 பேர் மரணமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமில் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வீதி விபத்துக்களை தடக்கும் பொருட்டு சமய தலைவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை, சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சமயத் தலைவர்கள் தாம் சார்ந்த சமூகத்துக்கு வழிகாட்டியாக செயற்படுவதோடு சட்டத்தையும் மக்களுக்கு விளங்கப்படுத்துபவராகவும் செயற்பட வேண்டும். சட்டத்தை பொலிஸார், அதிகாரிகளால் மட்டும் கொண்டு செல்ல முடியாது அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒரு பிரதேசம் அபிவிருத்தியடைய வேண்டமானால் அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். எமது பிரதேசத்தை பொறுத்த வரை மக்கள் சட்டத்தை மதிக்கும் தன்மை குறைவடைந்தள்ளது.

கடந்த பத்தாண்டு காலத்தில் இலங்கையில் 359,590 விபத்துக்களில் 24 ஆயிரத்தி 819 பேர் இறந்துள்ளார்கள்.

இதில் கடந்த வருடம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 12 பேர் விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு மாரணங்கள் ஏற்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்நோக்கிச் செல்லக் கூடிய நிலை ஏற்படும்.

சட்டம் மக்களை பாதுக்காப்பதற்காகவே, எனவே, சமூகத் தலைவர்கள் உங்களுடைய பிரதேசங்களிலுள்ள வாகனச் சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களுக்கு போக்குவரத்து சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கமாறு உபதேசம் செய்ய வேண்டும்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகமாக ஏற்படுகின்றது. மோட்டார் சைக்கிள் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து சகல ஆவணங்களுடனும் தலைக்கவசம் அணிந்து செல்லுமாறும் அவர் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X