2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் பலி;ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால, எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவு வீதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.  

ஆற்று மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.  இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை, மலையடிக் கிராமத்தைச் சேர்ந்தவர்களான முனீர் முஹமட் றிஸ்வான் (வயது 24) என்பவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ள அதேவேளை, ஹமீர் முனாபீர் (வயது 22)  என்பவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில்  பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த லொறிச் சாரதி சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X