2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் பலி

Princiya Dixci   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, தமண பிரதேசத்திலிருந்து பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று அப்பிரதேசத்தில் உள்ள ஆற்றில் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமண பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றுப் பிரதேசம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று 3ஆம் கட்டையைச் சேர்ந்த உமர்லெப்பை பாறூக் (வயது 43), என்பவரும் அக்கரைப்பற்று 1ஆம் குறிச்சியைச் சேர்ந்த மபாஸ் முஹம்மது இஸ்மாயில் றிஸ்லி (வயது 42) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X