Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் 8 நாட்களின் பின்னர் கண்டி வைத்தியசாலையில் நேற்று(26) இரவு உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று 7/2 பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய அமரக்கோன் ரேகநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று அல்ஹிதாயா பாடசாலைக்கு அருகில் கடந்த 19ஆம் திகதி சைக்கிளில் பயணித்த குறித்த நபரை அவ்வீதியால் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதிச் சென்றது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று (26) இரவு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயங்களுடன் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பாதுகாப்புடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago