2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வேளாண்மைச் செய்கைக்கு நீர் வழங்கவும்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை, மலையடிக்கண்ட கிராம விவசாயிகள், வேளாண்மைச் செய்கைக்கு நீர் வழங்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இது தொடர்பில் மலையடிக்கண்ட விவசாய அமைப்பின் தலைவர் எம்.ஐ.ஹபீப் தெரிவிக்கையில், 'மலையடிக்கண்ட பிரதேசத்தில் சிறுபோக வேளாண்மைச் செய்கை பண்ணுவதற்காக கடந்த மார்ச் மாதம் ஆரம்பக் கூட்டம் நடத்தப்பட்டது.   அதில் விதைப்பு வேலையை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல்; மே மாதம் முதலாம் திகதிக்கு இடையில் முடிவடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய, வேளாண்மைச் செய்கைக்கான ஆரம்ப வேலையில்; விவசாயிகள ஈடுபட்டுள்ளனர். இந்த வேளையில்; தமது வயல்களுக்கு நீரை அம்பாறை, இங்கினியாகலை நீர்ப்பாசனக் குளத்திலிருந்து வராமல் தடுத்து, நீர் வரும் வாய்க்காலின் வான்கதவையும் நீர்ப்பாசன அதிகாரிகள்; கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து (26) மூடியுள்ளனர். இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்' என்றார்.

'இதுவரை காலமும் தமது வேளாண்மைச் செய்கைக்கான நீரை இங்கினியாகலை நீர்ப்பாசனக் குளத்திலிருந்தே நாம் பெற்றுவந்தோம். ஆனால், தற்போது இந்தக் குளத்திலிருந்து நீர் கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

மலையடிக்கண்டக் கிராமத்தில்; 315 ஏக்கரில் வேளாண்மை செய்வதற்கு ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X