Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 25 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாணத்தில்; இயங்குகின்ற அரசாங்க மற்றும் தனியார் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையக் கிளைகளை தொடர்ந்தும் அம்மாகாணத்தில் இயங்குவதற்காக அவசர நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக அம்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையக் கிளைகளை அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய நகரங்களில் இயங்குகின்றன. இங்கு 04 அரசாங்கப் பயிற்சி நிலையங்களும் சில தனியார் பயிற்சி நிலையங்களும் இயங்குகின்றன.
இந்நிலையில், திடீரென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தவிசாளரினால் அனுப்பப்பட்டுள்ள 01ஃ2016ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் 20ஃ01ஃ2016 அன்று முதல்; கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பயிற்சி நிலையக் கிளைகளை மூடிவிட்டு, கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்பவர்களுக்கான பயிற்சிகள் மத்துகம, கண்டி, இரத்தினபுரி, மீகொட உள்ளிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள பயிற்சி நிலையக் கிளைகளில் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்தப் பயிற்சி நிலையக் கிளைகள்; மூடப்படவுள்ளதால், தமிழ் பேசும் கிழக்கு மாகாண மக்கள் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago