Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
“விளையாட்டின் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும்” என அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.ஆர்.எல்.றணவீர தெரிவித்தார்.
நேற்று (24) மாலை அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் நடந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கு இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகள் பெரிதும் துணை நிற்கின்றன. குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு பொதுமக்கள் இயன்றளவு பொலிஸாருக்கு உதவி புரிய வேண்டும்“ என்றார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் 53 ஓட்டங்களால் வெற்றி பெற்று வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து, ரூபாய் 20 ஆயிரம் பணப்பரிசையும் அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் அணி பெற்று சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.
அக்கரைப்பற்று ஹல்லாஜ் அணி 2ஆம் இடத்தை பெற்று 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது. மூன்றாம் இடத்தை அட்டாளைச்சேனை நியூ ஸ்ரார் அணி பெற்றுக்கொண்டு 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும் கிண்ணத்தையும் பெற்றுக் கொண்டது.
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலிருந்து 40 அணிகள் பங்கு பற்றி இச்சுற்று போட்டி கடந்த 21ஆம், 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெற்றது. 5 ஓவர் கொண்ட இப்போட்டியில் அணிக்கு 11 பேர் கலந்து கொண்டு விளையாடினர்.
இறுதிநாள் நிகழ்வில், கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜே.எஸ்.கருணாசிங்கவும் விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பண்டார, அக்கரைப்பற்று பிரதேசசபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ.றாசிக், முன்னாள் உதவித்தவிசாளர் ஹக்கீம், அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சலாஹுடீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இறுதியில் அக்கரைப்பற்று பொலிஸ் மைதானத்தில் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இசைக்கச்சேரியும் நடைபெற்றது.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago