2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டு சம்பவம்: இருவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 மே 02 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும், எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் பயஸ் ரஸ்ஸாக் ஞாயிற்றுக்கிழமை (01) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (30) மருதமுனை 06ஆம் குறிச்சியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த இவ்விருவரும், அங்கிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பின்போது, குறித்த நபர்கள் இருவராலும் நடத்தப்பட்ட  வாள்வெட்டில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு, காயமடைந்த குடும்பத் தலைவரின் மருமகனான முஹம்மது சுபைர் உஸாம் மற்றும் இவரது சகோதரரான முஹம்மது சுபைர் ஹூசான் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இவர்களுள் முஹம்மது சுபைர் உஸாம் என்பவர் இராணுவப் படையில் கடமையாற்றும் சிப்பாய் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாமா- மருமகன் ஆகியோரிடையான சொத்துப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையே இந்தந் சம்பவத்துக்கு காரணம் என்று விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X