2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வாள்வெட்டு; 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் கடந்த மே மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன்; தொடர்புடையதாகக் கருதப்படும் 25 வயதுடைய ஒருவர், கடந்த 03 மாதங்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, ஆலையடிவேம்பு இராமகிருஷ்ணமிஷன் கல்லூரிக்கு அண்மையிலுள்ள  விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.

ஆலையடிவேம்பு 8ஆம் பிரிவில் வசித்துவரும் தனது தங்கையின் கணவரை, மதுபோதையில் வாளால் வெட்டிப் படுகாயம் ஏற்படுத்திவிட்டு, இச்சந்தேக நபர் தப்பிச்சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X