2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலமும் மர நடுகையும்

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
 
உலக சமாதான தினத்தை முன்னிட்டு ' சமாதானத்திற்காக கைகோர்த்து அனைவரினதும் சுய கௌரவத்தைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் மர நடுகையும்  இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் இன,மத பேதமில்லாத சமூகத்தை உருவாக்குவோம், நடந்ததை மறந்து மாணவர்களாகிய நாம் சமாதான யுகம் படைப்போம், ஒற்றுமையே எங்கள் பலம், புரிந்துணர்வுடன் செயற்பட்டு சமாதானத்தை உருவாக்குவோம்  போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்ள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X