2025 மே 21, புதன்கிழமை

விவசாயிகள் திண்டாட்டம்

Princiya Dixci   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்து மலிவு விலையில் தனியார் வர்த்தகர்களுக்கு நெல் விற்கப்படுவதனால் உரிய பெறுமதிக்கு நெல்லை விற்க முடியாமல் தாம் திண்டாடுவதாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;,

'கடந்த வருடம் நெற்சந்தைப்படுத்தும் சபையில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் தற்போது ஒரு கிலோவுக்கு 24 ரூபாய் என்ற அடிப்படையில் தனியாருக்கு விற்கப்படுகிறது. இந்த விலைக்கு எம்மால் நெல்லை விற்க முடியாது. அது எமக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.  

நெல் சந்தைப்படுத்தும் சபை நெல்லை குறைந்த விலைக்கு விற்பதற்கு முன்னர் வர்த்தகர்கள் எம்மிடம் இருந்து 65 கிலோகிராம் கொண்ட ஒரு மூடை நெல்லை 2,200 ரூபாய்க்கு கொள்வனவு செய்தனர். 

ஆனால், தற்போது மிகவும் மலிவு விலையில் அவர்களுக்கு நெல் கிடைப்பதனால் எம்மிடம் இருந்து ஆகக்கூடியது 1,800 ரூபாவுக்கே நெல்லை எதிர்பார்க்கின்றனர்.

நெல் சந்தைப்படுத்தும் சபையின் இந்த பிழையான நடவடிக்கையினால் நாம் செய்த முதலீட்டைக் கூட பெற முடியாமல் பெரும் கைசேதத்துடன் திண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

தனி நபர்களிடமும் வங்கிகளிடமும் கடன் வாங்கி விவசாயத்துக்கு முதலீடு செய்த பல விவசாயிகள் குறைந்த விலைக்காவது நெல்லை விற்று கடனை அடைக்க வேண்டிய நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்' என்று அவர்கள் சுட்டிக்காடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .