Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
'சாரதிகளும் நாங்கள்தான், நடத்துனரும் நாங்கள்தான் என்று மார்தட்டி பெருமையாகப் பேசித்திரிகின்ற சகோதரர் ரவூப் ஹக்கீமால் ஏன் முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு முடியவில்லை' என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்ருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் திங்கட்கிழமை(04) மாலை இடம்பெற்ற சதோச திறப்பு விழாவை முன்னிட்டு கலாசார நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உiராயற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'அமைச்சுப் பதவிகளையும் அந்தஸ்தையும் வைத்துக் கொண்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்;க்கட்சித் தலைவர் ஆகியோரை அழைத்து வந்து மாநாடு என்ற போர்வையில் மக்கள் என்னோடுதான் என்பதனை காட்டுவதற்கு கடுமையான பிரயத்தனங்களை செய்தார்.
சகல அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு ஏன் மாநாட்டு மக்கள் வெள்ளத்தில், இந்த சமூகத்தினது அல்லது மாவட்ட மக்களினது பிரச்சினைகளை முன்வைக்கவில்லை' என்றார்.
'சமுதாயத்தின் தேவைகளை அறிந்து செயலாற்றுவதற்காக நாங்கள் இந்தக் கட்சியைப் பயன்படுத்துகின்றோம். முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், இழந்த காணிகள், பள்ளிவாயல்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டு வருகின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.
சதொச நிறுவனங்கள் மூலமாக அரசாங்க ஊழியர்களுக்கு வட்டி இல்லாக் கடன் அடிப்படையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 'நல்லாட்சி அரசாங்கமானது சதொச நிறுவனங்களை பாரம் எடுத்த பின்னர் அவை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறியுள்ளன. மக்களுக்குத் தரமானதாகவும்; குறைந்த விலையிலும் பொருட்களை வழங்குவதற்கு பின்தங்கிய பிரதேசங்கள் தோறும் சதொச கிளை திறந்து வைக்கப்பட்டு வருகின்றது.
சதொச கிளை மூலம் மக்கள் முழுமையான பயனை அடைய முடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
24 minute ago
33 minute ago