2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 மே 12 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்;ந்த குறித்த சந்தேக நபர்  கடந்த 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு,  மறுநாள் 5ஆம் திகதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்;படுத்தப்பட்டார். இதன்போது, பொலிஸாரின் கோரிக்கைக்கு ஏற்ப 7 நாள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியிருந்தார்.

இதன் பின் நேற்றுப் புதன்கிழமை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தியபோதே, நீதவான்  இந்த உத்தரவைப் பிறப்பித்தர்.
27 வயதுடைய இந்தச் சந்தேக நபரிடமிருந்து 150 மில்லிகிராம் நிறையுடைய  3 ஹெரோயின் பக்கெட்டுகளை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X