2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று மாநகரசபை வீதியில் யு வளைவுகள் குறைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 09 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று மாநகரசபைப் பிரதான வீதியில் காணப்பட்ட 32 யு வளைவுகள்  06ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

மேற்படி வீதியில் இடம்பெறும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த வளைவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது விபத்துகளும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளினாலும் விபத்துகள் சம்பவிக்கின்றன. இந்த மாடுகள் வீதிகளில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் நடமாடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X