2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'அக்கறைப்பற்றுக்கு விசேட பொலிஸ் குழு'

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்தபவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்த தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் மது போதையில் வாகனம் மற்றும் மோட்டார்; சைக்கிள் செலுத்தபவர்களாலேயே அதிகளவில் வீதி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் முகமாக மது போதையில் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களை இலகுவாக கண்டுபிடிப்பதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறானவர்கள் உடன் கைது செய்யப்பட்டு,அவர்களது வாகனமும்; பறிமுதல் செய்யப்பட்டு, அனுமதிப் பத்திரங்களும் இரத்து செய்யப்படும் அதேவேளை, கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

மேலும்,மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் கூடுதலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, வாகன சாரதிகள் மது பாவனையை தவிர்;த்து கொள்வதுடன்,வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றி வாகனங்களை செலுத்துவதால் பேராபத்துகளை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .