Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அனர்த்த முகாமைத்து அமைச்சின் கீழ் இயங்கிவரும் அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கை சமிக்ஞையினை பொதுமக்களுக்கு வழங்கும் வீ.எச்.எப் தகவல் பரிமாற்றக் கருவிகளை பரிசோதிக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் குழுவினர் இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
லெப்டினன் கேணல் டபிள்யு.எஸ்.என்.பெரேரா தலைமையில் விஜயம் செய்த இக்குழுவில், அவசர செயற்பாட்டு நிலைய பொறுப்பதிகாரி பி.கொடித்துவக்கு, தகவல் பரிமாற்ற பொறுப்பதிகாரி எஸ்.அப்பு ஆராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஏ.சக்கில் அஹமட் ஆகியோர் உள்ளடங்கினர்.
இதன்போது,அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் பொறுத்தப்பட்ட அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கை சமிக்ஞையை பொதுமக்களுக்காக வழங்கும் வீ.எச்.எப் தகவல் பரிமாற்றக் கருவி கடந்த சில நாட்களாக சீரற்று காணப்பட்டு வந்தது. இதனை இக்குழுவினர் சீர் செய்து அக்கருவி தொடர்பான தகவல் பரிமாற்றங்களை எவ்வாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்திலிருந்து பெறுவது என்பது பற்றிய விளக்கத்தை கேணல் டபிள்யு.எஸ்.என்.பெரேரா வழங்கினார்.
கல்முனை, காரைதீவு, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் பொறுத்தப்பட்டிருக்கும் அனர்த்த எச்சரிக்கை சமிக்ஞை வழங்கும் வீ.எச்.எப் தகவல் பரிமாற்றக் கருவிகளை இக்குழுவினர் இந்த விஜயத்தின்போது பரிட்சித்து பார்த்தமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago