Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
புறநெகும திட்டத்தின் இறுதிக் கட்டத்தின் ஊடாக பிரதேச சபைகளைத் தெரிவு செய்து அந்த சபைகளுக்கு 5 மில்லியன் ரூபாய் பெருமதியான அளிப்புக்கள் செய்துள்ளனர்.
இத்தெரிவில் அம்பாறை மாவட்டத்தில் 10 சபைகள் தெரிவாகியிருந்த போதிலும் திருக்கோவில் பிரதேச சபைத் தெரிவில் உள்ளடக்கப்படாமையினால் பல நன்மைகள் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கப் பெறாது போனமையிட்டு நான் கவலையடைகின்றேன் என பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜனாப் ஏ.டி.எம். றாபி தெரிவித்துள்ளார்.
யூ.என்.டி.பி. நிறுவனத்தின் சுமார் 41 மில்லயன் நிதியுதவியுடன் அம்பாறை, திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பொது சந்தைக் கட்டடத் தொகுதி திறப்பு விழா, நேற்று புதன்கிழமை (24) திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர் ஏ.சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இவ் தெரிவுகள் அரசியல் சார்பற்ற முறையில் இடம்பெற்றதுடன், கிழக்கு மாகாணத்தில் 28 சபைகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அம்பாறையில் 10 சபைகளுக்கு மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தெரிவின் முலம் மக்களுக்கு கிடைகின்ற பாரிய நன்மைகள் தெரிவு செய்யப்படாத சில சபைக்கு கிடைக்காமல் போயுள்ளது. இது எனக்கு மிகவும் கவலையளிக்கின்றது. நாம் முடிந்தளவு அனைத்து சபைகளுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி செய்த போதிலும் முடியாது போயுள்ளது.
இதேபோன்று யூ.என்.டி.பி. நிறுவனத்தின் நிதியுதவி மூலம் கட்டப்பட்டு இன்று (நேற்று) திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தைக் கட்டடத் தொகுதி மக்களினால் பயன்படுத்தப்படாது போகுமேயானால் எதிர்காலத்தில் இப்பிரதேச சபைக்கு யூ.என்.டி.பி.நிறுவனத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் அபிவிருத்திக்கான நிதிகள் கிடைக்காமல் தடைபடும் நிலைமைகள் தோன்றலாம். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுமானால் அந்தப் பொறுப்பை பொது மக்கள் தான் ஏற்க வேண்டும்.
உங்கள் பிரதேசத்துக்குக் கிடைக்கும் அபிவிருத்திகளை இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் சரியாக பயன்படுத்தத் தவறுவார்களேயானால் அது இந்தப் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தியில் பாரிய தாக்கங்களை செலுத்தக் கூடும்.
எனவே, ஒரு திட்டம் வெற்றி பெறுவதற்கு அப்பிரதேச மக்களின் பங்களிப்புக்களும் மிக முக்கியமான விடயமாக அமைந்துள்ளது என்றார்.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், உதவி திட்டப் பணிப்பாளர் எஸ். உதயகுமார், வங்கி முகாமையாளர்கள் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பொது மக்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
30 minute ago
56 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
56 minute ago
5 hours ago