2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'அபிவிருத்தி பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இம்மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் முடிவுருத்தப்பட வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட செயலகத்தின் கீழுள்ள 20 பிரதேச செயலகங்களில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மாத்திரம் இதுவரை முடிவுருத்தப்படவில்லை.
இந்த வேலைகள் யாவும் இம்மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் முடியாவிட்டால், அப்பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதி  திருப்பியனுப்படும் என்று மாவட்ட செயலாளர் என்னிடம் கூறியுள்ளார். அதற்கமைய சகல அபிவிருத்தி பணிகளையும் மிக விரைவாக செய்து முடிக்கவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .