Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
நாட்டில் ஊழலை முற்றாக ஒழிப்பதற்கு அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு அவசியம்.இந்த நாட்டில் இருந்து இலஞ்சம்,ஊழலை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றால் நீதித்துறை தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்களின் மனமாற்றத்துடனான பூரண பங்களிப்பு அவசியம் என திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.
பரிசுத்தமான தேசம் ஒன்றை நாளைய சந்ததியினருக்கு உரித்தாக்கும் உயரிய நோக்குடன் இலஞ்சம்,ஊழல் அற்ற கௌரவமான பிரஜையாக வாழ்வேன் எனும் தொனிப்பொருளில் இன்று புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சந்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி கருத்தினை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
இலஞ்சம்,ஊழல் கருத்துக் கணிப்பில் எமது இலங்கை 85ஆவது நாடாக காணப்படுகின்றது.இதேநிலையில் இந்தியாவும் உள்ளது.இதனை நாம் சிந்திக்க வேண்டும்.ஆரம்ப கல்வியில் முதல் நிலையில் உள்ள இலங்கை இலஞ்சம்,ஊழலில் 85ஆவது இடத்தில் இந்தியாவுடன் இருப்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.
இலஞ்சம்,ஊழல் முற்றாக ஒழிய வேண்டும் என்றால் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் மனசாட்சிகளின் நிமித்தம் சிந்தித்து இதய சுத்தியுடன் கௌரவத்துடன் செயற்படுவார்களேயானால், ஒரளவேனும் இலஞ்சம்,ஊழலை தடுக்க கூடியதாக இருக்கும்.
அதிகாரம் எங்கு உள்ளதோ அங்குதான் இலஞ்சம்,ஊழல் காணப்படுகின்றன.எனவே எமது ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த இந்த புனிதமான செயற்பாட்டுக்கு நாம் அனைவரும் பங்களிப்புக்களை செய்து இலஞ்சம்,ஊழல் இல்லாத நாடாக இலங்கையை மாற்றுவதற்கு முதலில் நமது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார்.
54 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
3 hours ago