Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அரச சேவைகளை வினைத்திறனுடனும் விரைவாகவும் மக்களுக்கு வழங்கும் பொருட்டு அரசாங்கத்தினால் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருவதாக கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். திலகராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் கணினி தரவூட்டல் பயிற்சி நெறி செவ்வாய்க்கிழமை (08) மட்டக்களப்பு கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஒவ்வொரு அரச திணைக்களமும் மக்களுக்கு செயற்திறனுடாக சேவைகளை வழங்கும் பொருட்டு இவ்வாறான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இது தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு உங்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகள் மற்றும் அறிவுரைகளை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் அபிவிருத்திக்கு எம்மாலான ஒத்துழைப்புகளை வழங்க முடியும்.
இதன் மூலம் உத்தியோகத்தர்களின் முதல் நியமனம் தொடக்கம் ஓய்வு நிலைக்கு செல்லும் வரையிலான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத் தன்மையையும் பேணிக் கொள்ள இலகுவாக இருக்கும்.
இதுபோன்று ஏனைய திணைக்களங்களும் மேற்கொள்ளுமிடத்து நேர விரயத்தைக் குறைத்துக் கொள்ள முடியுமென்றார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டத்துக்குட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்களின் தகவல் அடங்கிய தரவுக் கோவை கணினி மயப்படுத்தப்பட்டு இலகு தன்மையை ஏற்படுத்தும் வகையில் தரவுத் தளம் அமைக்கப்பட்டு குறித்த பயிற்சி நெறி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago