Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
வரவு -செலவுத்திட்டம் தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இந்த அரசாங்கத்திடம் தூரநோக்குச் சிந்தனை கிடையாது. அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு -செலவுத்திட்டத்தை முழு உலகமும் இன்று பேசி வருகின்றது.
நாட்டில் 98 சதவீதமானோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை முன்னாள் ஜனாதிபதியே வழங்கினார். இந்த அரசாங்கத்துக்கு 02 சதவீதம் மாத்திரமே வழங்கி வேண்டியுள்ளது. கஷ்ட, தூர கஷ்ட பிரதேசங்களிலும் வாகரை, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மின்சாரம் வழங்கி இருந்தார். மேலும், விவசாயிகளின் உரமானியத்துக்கும்; பாரிய சவாலான நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
51 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago