Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா,ஏ.எஸ்.எம்.முஜாஹித்
எனக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாதவாறு சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்லரிச்சல் முதலாம் பிரிவு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(01) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சங்கத்தின் தலைவி எஸ்.பாயிஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில்,
கடந்த மாகாண சபை தேர்தலின் போது நீங்கள் எனக்கு வழங்கிய ஒவ்வொரு வாக்கும் தற்போது பெறுமதி மிக்கதாக மாறியுள்ளது. இதனைக் கொண்டு எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ளவுள்ளேன்.
இதற்காகவே நான் மாகாண சபை உறுப்பினராக பதவியேற்ற கையோடு சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களையும் சந்தித்து பிரதேசத்திலுள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டேன். மேலும்,பாடசாலைகளின் தேவைகளை அதிபர் மற்றும் கல்வியியலாளர்களை சந்தித்து அறிந்து கொண்டேன் என்றார்.
மேலும்,நீங்கள் எனக்கு வழங்கிய அரசியல் அதிகாரத்தினை கொண்டு பெறப்படும் நிதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர்களுடன் கலந்தாலோசித்துள்ளேன். அவர்களது முழுமையான ஒத்துழைப்புடன் பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்க திடமிட்டுள்ளேன்' எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago