2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'அ.இ.ம.காவின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக உள்ளது'

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் திருத்திய யாப்பும் அதன் உயர் பீடமும் ஜனநாயக முறையிலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருப்பது முஸ்லிம் சமூகத்தின் அரசியலுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் இன்று (19) தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருணாகலில் நடைபெற்ற அகில இலங்கை காங்கிரஸின் பேராளர் மாநாடு, அக்கட்சி உருவான காலம் முதல் நடத்தப்படாத அளவு மிகவும் சிறப்பானதாகவும் ஜனநாயக தன்மையை கொண்டதாகவும் அமைந்ததுடன், மக்களின் அமோக வரவேற்பையும் பெற்றமையானது மக்கள் அக்கட்சி தலைமை மீது கொண்டுள்ள பற்றையும் அபிமானத்தையும் வெளிக்காட்டுகிறது.

இதன்மூலம் 2010ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் பிரபல்யமான எந்த அரசியல்வாதியும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியை ஆதரிக்க முன்வராதபோது, அவரை சரியாக இனங்கண்டு இணைந்தவன் என்ற வகையில் நான் சந்தோசமடைகிறேன்.

அத்துடன் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்கி கட்சியை அறிமுகப்படுத்தினோம்.

அதுவே அம்பாறை மாவட்டத்தில் அக்கட்சி முகம்கொடுத்த முதலாவது தேர்தலாகும். கட்சி பாரிய வெற்றி பெறக்கூடிய நிலையில், சிலரின் கபட நாடகம் காரணமாகவும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச வாதத்துக்கும் இனவாதத்துக்கும் பொய்களுக்கும் மக்கள் மயங்கி அவர்களுக்கு வாக்களித்துவிட்டு இன்று கல்முனை மாநகர சபை உலகிலேயே மிக மோசமான மாநகரசபையாக, குப்பையாக இருப்பது கண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றே நாம் கூறினோம்இ சமூக உணர்வு கொண்ட சமூகம் பற்றிய கவலையுள்ள அமைச்சர் ரிஷாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கல்முனை மாநகர சபையின் ஆட்சியில் வைக்கும்படி. எமது பேச்சை கேட்காமையின் விளைவை இன்று அம்மக்கள் அனுபவிப்பதும் கண்டு கவலையடைந்து வருகின்றார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X